
முன்னாள் தவிசாளரின் காரில் மோதுண்டு ஒருவர் மரணம்
தம்புள்ளை – பல்வெஹர பிரதேசத்தில் கிழக்கு மாகாண சபையின் முன்னாள் தவிசாளர் ஆரியவதி கலப்பத்தி பயணித்த கார் மோதுண்டு ஒருவர் இன்று சனிக்கிழமை உயிரிழந்துள்ளார்.
மாத்தளை நாவுல பகுதியை சேர்ந்த 39 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளார்.
உயிர் இழந்தவர் பல்வெஹர பகுதியில் வீதியை கடக்க முற்பட்டபோது இவ்வாறு விபத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் காரின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
