முன்னாள் காதலிக்காக ஆடம்பரமான பரிசுகள் மற்றும் செலவுகளுக்காக 369,000 அமெரிக்க டொலர் செலவிட்ட நபர், அந்தப் பணத்தை மீண்டும் பெற்றுக்கொள்ள தொடர்ந்த வழக்கில் தோல்வியடைந்துள்ளார்.
காதல் உறவின்போது வழங்கப்பட்ட பரிசுகள் மற்றும் செய்யப்பட்ட செலவுகளை, உறவு முடிவடைந்த பின்னர் திரும்பப் பெற முடியுமா என்ற கேள்வியை இந்த வழக்கு எழுப்பியுள்ளது.
நீதிமன்றம் அந்த நபரின் கோரிக்கையை நிராகரித்துள்ள நிலையில், காதல் உறவின்போது விருப்பத்துடன் வழங்கப்பட்ட பரிசுகள் பின்னர் உறவு முறிந்ததற்காக தானாகவே மீளப்பெறக்கூடியவை அல்ல என்பது இந்த வழக்கின் முக்கிய அம்சமாகியுள்ளது.










