முதன்முறையாக ஆட்டமிழந்த தோனி

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்ற இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் பஞ்சாப் அணிக்கெதிரான போட்டியில் இறுதி நேரத்தில் களமிறங்கிய தோனி ரன் அவுட் மூலம் ஆட்டமிழந்தார்.

இது நடப்பு  இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் முதன்முறையாக தோனி ஆட்டமிழக்கும் முதல் நிகழ்வாகும்.

18 ஆவது ஓவரில் களமிறங்கிய தோனி 11 பந்துகளை எதிர்கொண்டு 14 ஓட்டங்களை குவித்தார்.

கடைசி ஓவரின் கடைசி பந்தை எதிர்கொண்ட அவர் இரண்டு ஓட்டங்களை எடுக்க முயற்சித்த போது ரன் அவுட் ஆனார்.

இதன் மூலம் நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் தோனி முதல் முறையாக தனது விக்கெட்டை இழந்துள்ளார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்