
முகத்தில் ஏறி இறங்கிய கார் : சிசிடிவி காட்சி
விபத்துகள் எங்கும் எப்பொழுதும் நிகழலாம், எனவே தன்னைத்தானே பாதுகாத்துக் கொள்வது மனிதனின் பொறுப்பு. பல நேரங்களில் வாகனம் ஓட்டும் போது விபத்து ஏற்படுகிறது. அதிவேகமாக ஓட்டினால்தான் விபத்துகள் நிகழும் என்றில்லை, ஆனால் விபத்துகள் பொதுவாக குறைந்த வேகத்தில் வாகனம் ஓட்டினாலும் அலட்சியத்தால் நிகழ்கிறது. இதுபோன்ற ஒரு சம்பவத்தில் வெளியில் தூங்கிக் கொண்டிருக்கும் பெண்கள் இருவரின் மீது கார் ஏறி இறங்கும் காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அண்மையில் ட்விட்டர் கணக்கு ஒன்றில் வெளியிடப்பட்ட வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில், கடைக்கு வெளியே தரையில் பிளாஸ்டிக் தாளை விரித்து இரு பெண்கள் தூங்கிக் கொண்டிருக்கின்றனர். அப்போது அந்த குறுகலான இடத்திற்கு ஒரு வெள்ளை நிற கார் வருகிறது, காரை இயக்கிக்கொண்டு வரும் நபர் ஒருவர் காரை திருப்ப முயல்கையில் கடைக்கு வெளியே தூங்கிக் கொண்டிருக்கும் இரு பெண்களை கவனிக்காமல் அவர்கள் மீது திடீரென காரை ஏற்றி இறக்குகிறார். அதிர்ச்சியில் துடித்து எழுந்த பெண்களில் ஒருவருக்கு கழுத்தில் பலத்த காயம் ஏற்பட்டிருப்பது சிசிடிவியில் பதிவாகி உள்ளது. காரை இயக்கிய நபரும் உடனடியாக வெளியில் வந்து அந்தப் பெண்ணிடம் உடல்நிலை குறித்து கேட்பதும் சிசிடிவியில் பதிவாகி இருந்தது.
குறிப்பிட்ட இந்த வீடியோ 85 இலட்சத்திற்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது. இணையவாசிகள் பலரும் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். வாகனம் திரும்பும் போது, உள்ளே இருந்தபடி கீழே படுத்திருக்கும் பெண்களைப் பார்ப்பது கார் ஓட்டுநருக்கு கடினமாக இருந்திருக்கும் என்று ஒரு ட்விட்டர் யூசர் கூறியுள்ளார். இது மிகவும் வேதனையான சம்பவமாக தெரிகிறது என்று மற்றொருவர் கூறினார்.
Oblivious driver runs over women sleeping on the ground 😳 pic.twitter.com/ArJ4H7TTPp
— Crazy Clips (@crazyclipsonly) July 21, 2023
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
