மீன் பிடிக்க சென்றவர் உயிரிழப்பு

நுவரெலியா மாவட்டம் கொவிதுபுர – ஜெயந்தி ஏரியில் நேற்று சனிக்கிழமை காலை மீன் பிடிக்கச் சென்ற நபர் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.

கொட்டகொடை பிரதேசத்தை சேர்ந்த 58 வயதுடையவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இவர் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை வீட்டில் இருந்து மீன் பிடிக்கச் சென்றுள்ளதாக பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொவிதுபுர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்