மீனவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக மீனவர்களை கடலுக்கு செல்வதை தவிர்க்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

அதன்படி, சிலாபத்திலிருந்து புத்தளம், மன்னார் ஊடாக காங்கேசன்துறை வரையிலும் மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையிலும் மறு அறிவித்தல் வரை கடலுக்கு செல்வதை தவிர்க்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.