மீனவர்களுக்கு எச்சரிக்கை
நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகள், வங்காள விரிகுடா மற்றும் அரபிக்கடல் ஆகிய பகுதிகள் கொந்தளிப்பாக காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
குறித்த கடற்பகுதிகளில் இடைக்கிடையே மணித்தியாலத்துக்கு 60 – 70 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால் மறு அறிவித்தல் வரை நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் கடற்றொழில் நடவடிக்கைகளில் ஈடுபடுவதை தவிர்க்குமாறு கடற்றொழிலாளர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்