
மீனவரின் வலையில் சிக்கிய 3700கிலோ எடை கொண்ட சுறா மீன்
-யாழ் நிருபர்-
வடமராட்சி கிழக்கு உடுத்துறை 10ஆம் வட்டாரத்தை சேர்ந்த மீனவரின் வலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை பாரிய சுறாமீன் பிடிபட்டுள்ளது.
உடுத்துறை 10ஆம் வட்டாரத்தில் இருந்து நேற்று கடல் தொழிலுக்கு சென்ற மீனவர் ஒருவருக்கே இந்த அதிர்ஷ்டம் கிட்டியுள்ளது.
குறித்த சுறா மீனுடைய மொத்த நிறை 3700 கிலோ கிராம் எனவும், நீண்ட காலத்திற்கு பிறகு வடமராட்சி கிழக்கில் அகப்பட்ட அதிகளவான நிறை உடைய சுறா மீன் இதுவாக உள்ளதாகவும் மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
சுறா மீன் பிடிக்கப்பட்டுள்ள தகவல் அறிந்து நேற்று காலை அதிகளவான பொதுமக்கள் உடுத்துறை கடற்கரையில் கூடியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்


