
மீண்டும் முகக்கவசம் அணிய பணிப்பு
நாட்டில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரிகரித்து வரும் நிலையில் மக்களை முக கவசம் அணியுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நேற்று புதன்கிழமை மேலும் 7 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.
இதற்கமைய இலங்கையில் இனங்காணப்பட்டுள்ள கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 6 இலட்சத்து 72 ஆயிரத்து 143 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா தொற்றானது குறைவடைந்துள்ள நிலையில் மீண்டும் தொற்றாளர்கள் இனங்காணப்படுவதானது ஆபத்தான விடயம் எனவே இதிலிருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை பேணுதல் உள்ளிட்ட சுகாதார விதிமுறைகளை மக்கள் தொடர்ந்தும் பின்பற்ற வேண்டும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்