மீண்டும் டுபாய் சென்றார் அலி சப்ரி ரஹீம்?

தங்கம் கடத்திய குற்றச்சாட்டின் பேரில் அபராதம் விதிக்கப்பட்ட  புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம், மீண்டும் டுபாய் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஃப்ளை டுபாய் விமான சேவைக்கு சொந்தமான விமானம் மூலம், நேற்று முன்தினம் வியாழக்கிழமை அவர் டுபாய்க்கு பயணமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

3.5 கிலோ கிராம் தங்கம் மற்றும் 91 கைபேசிகளை, டுபாயிலிருந்து சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டுவந்த குற்றச்சாட்டில், முஸ்லிம் ஐக்கிய தேசிய கூட்டமைப்பின் புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம், கட்டுநாயக்க விமான நிலையத்தின் சுங்க பிரிவு அதிகாரிகளால், கடந்த 23ஆம் திகதி கைது செய்யப்பட்டார்.

இது தொடர்பில் இடம்பெற்ற விசாரணைகளின் பின்னர், 7.5 மில்லியன் ரூபா அபராதம் விதித்து அவர் விடுவிக்கப்பட்டார்.

எனினும், அவர் கொண்டுவந்த தங்கம் மற்றும் கைபேசிகள் அரசுடமையாக்கப்பட்டன.

குறித்த தங்கம் மற்றும் கைபேசிகள், தம்முடையதல்ல என்றும், அது தம்முடைய நண்பருடையதாகும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்