மீண்டும் உயர்ந்தது கரட்டின் விலை

சந்தையில் வீழ்ச்சியடைந்து இருந்த கரட்டின்  விலை மீண்டும்  திடீரென உயர்ந்துள்ளது.

கடந்த காலங்களில் 2,000 ரூபாவுக்கு அதிகமாக உச்ச விலையை கொண்டிருந்த கரட்டின் விலை கடந்த மூன்று நாட்களாக கிலோவுக்கு 900 ரூபாயாக விவசாயிகளிடம் கொள்வனவு செய்யப்பட்டு அதை நுகர்வோருக்கு 950 ரூபாய் என விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிலையில், வீழ்ச்சியடைந்து இருந்த கரட்டின் விலை இன்று செவ்வாய்க்கிழமை காலை மீண்டும் உச்சம் பெற்றுள்ளது.

ஒரு கிலோ கிராம் கரட்  விவசாயிகளிடம் 1,130 ரூபாய்க்கு கொள்வனவு செய்யப்பட்டு அதை 1180 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படவுள்ளதாக நுவரெலியா மத்திய பொருளாதார நிலைய காரியாலயம் அறிவித்துள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்