மின் கட்டண திருத்தங்களுக்கு அமைச்சரவை அங்கீகாரம்

03 மாதங்களுக்கு ஒரு முறை மின் கட்டண திருத்தங்களுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

தற்போதுள்ள வழிகாட்டுதல்களின் கீழ் 06 மாதங்களுக்கு ஒருமுறை மின் கட்டண திருத்தங்கள் அனுமதிக்கப்படுவதாக அரசு தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், இந்த முறைமையினால் பொதுமக்களுக்கு ஏற்படும் பாதிப்பை கருத்திற்கொண்டு, 03 மாதங்களுக்கு ஒருமுறை மின்சார கட்டண திருத்தங்களை உள்ளடக்கிய வழிகாட்டுதல்களை திருத்துவதற்கு முன்மொழியப்பட்டது.

இதன்படி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் மின்சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர ஆகியோர் இணைந்து சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்