மின் கட்டண அதிகரிப்பு: பேக்கரி பொருட்களின் விலை தொடர்பில் வெளியான தகவல்
மின் கட்டண உயர்வுக்கு ஏற்ப பாண் உள்ளிட்ட பேக்கரி பொருட்களின் விலைகளை அதிகரிக்கும் எண்ணம் இல்லை என பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
குறித்த விடயத்தை அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே. ஜெயவர்தன ஊடகம் ஒன்றுக்கு நேற்று வியாழக்கிழமை தெரிவித்துள்ளார்.
உற்பத்திச் செலவில் அதிகரிக்கப்பட்ட மின்சாரக் கட்டணம் சேர்க்கப்பட்டாலும், தற்போது பேக்கரி பொருட்களின் விலையை அதிகரிக்கும் எண்ணம் இல்லை. அத்துடன் விலைகளை அதிகரிக்க வேண்டாம் என்று பேக்கரி உரிமையாளர்களிடம் வேண்டுகோள் விடுப்பதாகவும் சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.