மின் கட்டணத்தை செலுத்த புதிய முறைகள் அறிமுகம்

மின் கட்டணத்தை செலுத்துவதற்கு நுகர்வோருக்கு சில புதிய முறைகளை அறிமுகப்படுத்துவதற்கு இலங்கை மின்சார சபை செயற்பட்டு வருவதாக அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையின்படி, இலங்கை தபால் திணைக்களம், உத்தியோகபூர்வ இணையத்தளம் (ceb.lk) ஊடாகவும் வங்கி (KIOSK) இயந்திரங்கள் மற்றும் பல்பொருள் அங்காடிகள் ஊடாகவும் (mCash) ஊடாகவும் CEB Care செயலி, இணைய வங்கிச் சேவைகளை அறிமுகப்படுத்தியுள்ளது.

இது தொடர்பில் எழும் பிரச்சினைகள் தொடர்பில் 1987 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பதன் மூலம் நுகர்வோர் முறைப்பாடுகளை தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுவதாக மின்சார சபை மேலும் தெரிவித்துள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்