மின்னல் தாக்கி இருவர் பலி

புத்தல, கோனகங் ஆர வகுருவெல பிரதேசத்தில் உள்ள வயல்வெளியில் நேற்று சனிக்கிழமை இரண்டு ஆண்கள் மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளனர்.

புத்தல, வகுருவெல பிரதேசத்தை சேர்ந்த 31 மற்றும் 32 வயதுடையவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

கோனகங் ஆர பொலிஸார் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.