மின்னல் தாக்கம் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கும், ஹம்பாந்தோட்டை மற்றும் பொலனறுவை மாவட்டங்களுக்கும் கடுமையான இடியுடன் கூடிய மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த எச்சரிக்கை இன்று வியாழக்கிழமை இரவு 11 மணி வரை அமுலில் இருக்கும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இடி, மின்னல் ஏற்படும் நேரங்களில் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.