மின்சார கம்பியில் சிக்குண்டு ஒருவர் பலி

நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாந்திபுர பகுதியில் விவசாய காணியில் காப்புக்காக பொருத்தப்பட்டிருந்த மின்சார கம்பியில் சிக்குண்டு இன்று ஞாயிற்று கிழமை அதிகாலை ஒருவர் ஸ்தலத்திலேயே பலியாகி உள்ளார்.

சாந்திபுர பகுதியை சேர்ந்த மைக்கல் எக்லஸ் (வயது – 65) 3 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

தனது விவசாய தோட்டத்திற்கு மரக்கறி வகைகளுக்கு நீர் பாய்ச்சுவதற்காக போடப்பட்டிருந்த மின்சார கம்பியினை அப்புறப்படுத்த முயற்சி செய்தபோது மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.

சடலம் பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்படும் எனவும் இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.