மின்சாரம் தாக்கி சிறுமி உயிரிழப்பு

அனுராதபுரம் – மதவாச்சி பொலிஸ் பிரிவின் சங்கிலிகந்தராவ பகுதியிலுள்ள வீட்டில் சிறுமி மின்சாரம் தாக்கி ஆபத்தான நிலையில் மதவாச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் நேற்று வெள்ளிக்கிழமை உயிரிழந்ததாக மதவாச்சி பொலிஸார் தெரிவித்தனர்.

தண்ணீரை சூடாக்க மின்சார ஹீட்டரைப் பயன்படுத்தும் போது சிறுமி மின்சாரம் தாக்கி உயிரிழந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

சம்பவம் குறித்து மதவாச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.