மின்சாரம் தாக்கி ஒருவர் பலி

அனுராதபுரம் – கல்னேவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் நேற்று வியாழக்கிழமை மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்தார்.

நெகம்பஹா பகுதியைச் சேர்ந்த 68 வயதுடையவரே இவ்வாறு உயிர் இழந்துள்ளார்.

வயலுக்கு மின் மோட்டார் மூலம் தண்ணீர் எடுக்கச் சென்றபோது மின்சாரம் தாக்கி குறித்த நபர் உயிரிழந்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சடலம் நெகம்பஹா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

கல்னேவ பொலிஸார் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.