
மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழப்பு
மாத்தளை மாவட்டம் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழப்பு
தெல்தெனிய, கரல்லியத்த பிரதேசத்தில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கட்டுகித்துல, உடிஸ்பத்துவ பிரதேசத்தைச் சேர்ந்த 62 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சீமெந்து தொடர்பான பொருட்களை உற்பத்தி செய்யும் நிறுவனம் ஒன்றில் கம்பிகளை அறுத்துக் கொண்டிருந்த நபர் ஒருவர் மின்சாரம் தாக்கிய நிலையில் தெல்தெனிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தெல்தெனிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
