மின்சாரசபை ஊழியர்கள் கொழும்பில் முன்னெடுக்கவுள்ள பாரிய ஆர்ப்பாட்டம்

அனைத்து மின்சாரசபை ஊழியர்களையும் எதிர்வரும் புதன்கிழமை கொழும்புக்கு வரவழைத்து பாரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளதாக இலங்கை மின்சாரசபை  ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது.

மின்சார சபைத் தலைமையகத்திற்கு முன்பாக இந்தப் போராட்டம் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாக அதன் பொதுச் செயலாளர் ரஞ்சன் ஜெயலால் தெரிவித்தார்.

இதேவேளை, மின்சாரக் கட்டண அதிகரிப்புக்கு எதிராக நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு நாடளாவிய ரீதியில் பல பகுதிகளில் தீபம் ஏற்றி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்