மினுவாங்கொடையில் பெண்ணின் சடலம் மீட்பு
கம்பஹா – மினுவாங்கொடை பொலிஸ் பிரிவின் உன்னருவ பகுதியில் உள்ள வயலில் பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டதாக நேற்று வியாழக்கிழமை மாலை மினுவங்கொடை பொலிஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
உயிரிழந்த பெண்ணுக்கு 35 வயது இருக்கலாம் எனவும் சடலம் இன்னும் அடையாளப்படுத்தப்படாத நிலையில் சம்பவம் குறித்து மினுவாங்கொடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.