மா மற்றும் மஷாலா தூள் உற்பத்தி நிலையம் திறப்பு

-கிண்ணியா நிருபர்-

பொருளாதார ரீதியாக நலிவடைந்தவர்களுக்கு அவர்களின் திறன்கள், அறிவு மற்றும் சாத்தியமான வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதன் மூலம் நிலையான வருமானத்தை வழங்குவதற்காக கிண்ணியா சூரங்கல் கிராமத்தில் சூரா உற்பத்திகள் எனும் மா மற்றும் மஷாலா தூள் உட்பத்தி எனும் நிலையம் கிண்ணியா பிரதேச செயலாளர் .எம்.எச்.கனியால் திறந்து வைக்கப்பட்டது .

இங்கு கருத்து தெரிவித்த கிண்ணியா பிரதேச செயலாளர்,

இவ்வாறான முயற்சிகளின் முக்கியத்துவத்தையும், தமது பொருளாதார அபிவிருத்திக்கான அதிகபட்ச நன்மைகளை பெறுவதற்கு பயனாளிகள் எவ்வாறு இச்செயற்திட்டத்தில் பங்களித்து செயலூக்கத்துடன் பங்குகொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார்.

முஸ்லீம் எய்ட் ஸ்ரீலங்கா திருகோணமலை மாவட்டத்தில் பொருளாதார ரீதியாக நலிவடைந்தவர்களுக்கு அவர்களின் திறன்கள், அறிவு மற்றும் சாத்தியமான வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதன் மூலம் நிலையான வருமானத்தை வழங்குவதற்காக பொருளாதார அபிவிருத்தி வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தி வருகின்றது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்