மாவட்ட தொழில் நிலையங்களை பார்வையிடல் நிகழ்வு

-கிண்ணியா நிருபர்-

கல்விப் பொதுத்தராதர உயர்தரத்தில் கலைப்பிரிவில் கல்வி கற்கும் 60 மாணவர்களை தெரிவு செய்து அவர்களை மாவட்ட ரீதியாக தொழில் நிலையங்களை பார்ப்பதற்கான ஒழுங்கு முறையினை மனிதவலு வேலைவாய்ப்பு திணைக்களத்தின் அனுசரணையில் மாவட்ட செயலக தொழில் நிலையத்தின் ஏற்பாட்டில் கடந்த திங்கட்கிழமை நடைபெற்றது.

அராபத் மகா வித்தியாலயம், திரியாய் தமிழ் மகா வித்தியாலயம், நிலாவெளி கைலேஸ்வரா கல்லூரி, பெண்கள் உயர்நிலைப் பள்ளி,ராஜகிய வித்யாலோக வித்தியாலயம் போன்ற பாடசாலையிலிருந்து தெரிவு செய்யப்பட்ட மாணவர்கள் திருகோணமலை தொழில் நுட்ப கல்லூரி, உயர் தொழில் நுட்ப கல்லூரி, இறக்ககண்டி தொழில் பயிற்சி நிலையம் போன்ற இடங்களை பார்வையிட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் மாவட்ட இணைப்பாளர் மனிதவள அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி ஜெசினா பௌமி, மனிதவள அபிவிருத்தி உத்தியோகத்தர் சஜிதா பானு, திறன் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஜீனத் பானு மற்றும் மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.