மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரின் உத்தரவின் பேரில் எல்லைக் கற்கள் போடும் வேலைத்திட்டம் நிறுத்தப்பட்டது!

மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரின் உத்தரவின் பேரில் எல்லைக் கற்கள் போடும் வேலைத்திட்டம் நிறுத்தப்பட்டது!

மட்டக்களப்பு மாவட்டத்தின் வன இலாகாவானது தமது எல்லைகளை வரையறை செய்யும் வேலைத் திட்டத்தை கடந்த மாதம் ஆரம்பித்த போது மாவட்ட விவசாயிகள் மற்றும் வன ஜீவிகள் திணைக்களம் ஆகியோருக்கிடையில் முரண்பாட்டு நிலை ஏற்பட்டது

குறித்த பிரச்சினை தொடர்பில் சுமுகமான தீர்வுக்குச் செல்லும்வரை வன எல்லை நிர்ணயத்தை நிறுத்தும்படி, வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் மற்றும் வெளிவிவகார பிரதியமைச்சரும், மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான அருண்ஹேமசந்திரா கேட்டுக்கொண்டமைக்கு அமைவாக வேலைகள் தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டிருந்தன.

இந்நிலையில் நேற்று செவ்வாய்க்கிழமை மீண்டும் ஒரு சில இடங்களில் வனஜீவிகள் திணைக்களம் வேலைகளை ஆரம்பிக்க முயற்சி செய்வதாக விவசாயிகள் அமைச்சருடைய கவனத்திற்கு கொண்டு சென்றதன் பிற்பாடு மறு அறிவித்தல் வரும்வரை வன எல்லை நிர்ணய வேலைகள் அனைத்தையும் நிறுத்தி வைக்கும்படி மாவட்ட அரசாங்க அதிபருக்கு அருண்ஹேமசந்திரா இன்று புதன்கிழமை கடிதம் மூலம் பணித்துள்ளார்.

அதனைத்தொடர்ந்து எல்லை கற்கள் இடும் நடவடிக்கை நிறுத்தப்பட்டுள்ளது.