மாரடைப்பால் இறந்த பெண் பிரேதப்பெட்டியிலிருந்து உயிருடன் எழுந்துள்ளார்!
ஈக்குவடோரில் இறந்ததாக கருதப்பட்ட பெண்ணொருவர் உயிருடன் இருப்பது இறுதி நிகழ்வின் போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பெல்லா மொன்டயா என்ற 76 வயது பெண் கடந்தவாரம் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்ட நிலையில் மீண்டும் உயிருடன் எழுந்துள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை உறவினர்கள் அவரின் உடைகளை மாற்றிஇறுதி நிகழ்விற்கான ஏற்பாடுகளில் ஈடுபட்டிருந்தவேளை உறவினர் ஒருவர் அவர் சுவாசிப்பதை கண்டுள்ளார்.
இதனை தொடர்ந்து உடனடியாக உறவினர்கள் அவரை தீவிர கிசிச்சை பிரிவில் சேர்த்துள்ளனர்,நாட்டின் சுகாதார அமைச்சு இது குறித்து விசாரணை செய்வதற்காக குழுவொன்றை நியமித்துள்ளது.
இதன் போது பெண்ணிற்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது அவரை காப்பாற்றுவதற்கான முயற்சிகள் இடம்பெற்ற போதிலும் அது வெற்றியளிக்கவில்லை அவர் உயிரிழந்துவிட்டார் என மருத்துவர் உறுதி செய்தார் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும், 9 மணியளவில் அம்மாவை மருத்துவமனையில் அனுமதித்தோம் மதியமளவில் அவர் இறந்துவிட்டார் என வைத்தியர் தெரிவித்தார் என அந்த பெண்ணின் மகன் தெரிவித்துள்ளார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்