மாம்பழத்தின் நன்மைகள்

மாம்பழத்தின் நன்மைகள்

மாம்பழத்தின் நன்மைகள்

🟠🟡மாம்பழத்தில் பூரிதக் கொழுப்பு, கொலஸ்ட்ரால் மற்றும் சோடியத்தின் அளவு மிகவும் குறைந்தே காணப்படுகிறது. இதில் மேலும் முக்கியமாக நார்ச்சத்து மற்றும் வைட்டமின் பி6 அதிகம் உள்ளது. வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி-யும் அதிகம் உள்ளது. பொட்டாசியம், மெக்னீசியம் மற்றும் காப்பர் போன்ற கனிமங்களும் இதில் வளமாகக் காணப்படுகிறது. இது போக க்யூயர்சிடின், பீட்டா கரோட்டின் மற்றும் ஆஸ்ட்ராகாலின் போன்ற ஆக்சிஜெனேற்றத் தடுப்பான்கள் நிறைய உள்ளன. இந்த சக்தி வாய்ந்த ஆக்சிஜெனேற்றத் தடுப்பான்களுக்கு இயங்கு உறுப்புகளை நடுநிலையாக்கும் சக்தி உள்ளது.இவ்வளவு சத்துக்களைக் கொண்ட மாம்பழத்தின் நன்மைகளைப் பார்ப்போம்.

🥭மாம்பழத்தில் அதிக அளவு பெக்டின் என்ற கரையக்கூடிய நார்ச்சத்து இருப்பதால், இரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவை குறைத்திட உதவும்.

🥭உடல் எடையை அதிகரிக்க மாம்பழம் சாப்பிட்டால் சுலபமாக எடையை அதிகரிக்கலாம்.செரிமானமின்மை மற்றும் அமிலத்தன்மையினால் ஏற்படும் பிரச்சனைகளை தீர்க்கும் முக்கியமான பங்கு வகிக்கிறது மாம்பழம். மாம்பழத்தில் உள்ள செரிமான நொதிகள் இயல்பான முறையில் செரிமானம் நடந்திட உதவும்.

🥭மாம்பழத்தில் அதிகமாக இரும்புச்சத்து இருப்பதால், இரத்த சோகை உள்ளவர்களுக்கு இது மிகவும் நல்லது. மாம்பழங்களை ஒழுங்காகவும் தேவையான அளவும் உட்கொண்டால் குருதியின் அளவை அதிகரித்து இரத்த சோகையை சரிப்படுத்தும்.

🥭கர்ப்பமான பெண்களுக்கு இரும்புச் சத்து அதிகளவில் தேவைப்படுவதால், அவர்கள் மாம்பழம் உண்ணுவது மிகவும் அவசியம். பொதுவாக கர்ப்பக் காலங்களில் இரும்புச்சத்து உள்ள மாத்திரைகளை மருத்துவர்கள் பரிந்துரைப்பார்கள். அதற்கு பதில் வளமான இரும்புச்சத்துள்ள சாறு நிறைந்த மாம்பழங்களை உண்ணுதல் சாலச் சிறந்தது.

🥭முகப்பருவை சரிப்படுத்த மாம்பழம் மிகவும் உதவுகிறது. ஏனெனில் சருமங்களில் அடைப்பட்ட துவாரங்களை விடுவிக்க அது உதவும். இந்த துவாரங்கள் திறந்தவுடன் முகப்பருக்கள் மெதுவாக குறைய ஆரம்பிக்கும்.

🥭மாம்பழத்தில் உள்ள பெக்டின், புரோஸ்டேட் புற்று நோய் வருவதையும் தடுக்கும்.

🥭மூளையின் செயல்களை பாதுகாத்து மேம்படுத்த மிகவும் முக்கியமான வைட்டமின் பி6, மாம்பழங்களில் ஏராளமாக இருக்கிறது.

🥭ஒரு நாளைக்கு உடலுக்கு தேவையான 25 விழுக்காடு வைட்டமின் ஏ சத்தை, ஒரு கப் நறுக்கிய மாம்பழங்கள் தருகின்றன. இது கண்பார்வைக்கு மிகவும் நல்லது. மேலும் இது மாலைக் கண் மற்றும் வறட்சியான கண்களை தடுக்கும்.

🥭பச்சை மாங்காயை சாறு எடுத்து தண்ணீரில் கலந்து அதனுடன் இனிப்பை சேர்த்து பருகினால் உடல் குளிர்ச்சி அடையும். மேலும் உடலும் பாதுகாப்புடன் இருக்கும்.

🥭மாம்பழங்களில் உள்ள அளவுக்கு அதிகமான வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி, கொலாஜென் புரதத்தை உடலில் சுரக்க உதவி புரிகிறது. இரத்தக் குழாய்களையும் உடலில் உள்ள இணைப்புத் திசுவையும் காக்க கொலாஜென் உதவுவதால், வயதான தோற்றத்தை வெளிப்படுத்துவதை மாம்பழம் தள்ளி வைக்கும்.

மாம்பழத்தின் நன்மைகள்

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்