மாந்தை மேற்கில் ஓரங்கட்டப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை கட்டி எழுப்பும் நிகழ்ச்சித் திட்டம்

-மன்னார் நிருபர்-

ஓரங்கட்டப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை கட்டி எழுப்பும் திட்டத்தின் கீழ் விழுது ஆற்றல் மேம்பாட்டு மையத்தின் ஊடாக மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவில் தெரிவு செய்யப்பட்ட குளங்களில் நன்னீர் மீன் வளர்ப்பு திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

முதற்கட்ட நிகழ்வாக நேற்று மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவில் தாமரைக் குளத்தில் மீன் குஞ்சுகள் விடும் நிகழ்வு இடம்பெற்றது.

குறித்த நிகழ்வு விழுது நிறுவனத்தின் சிரேஷ்ட திட்ட அலுவலர் டலிமா தலைமையில் இடம்பெற்றது.

குறித்த நிகழ்ச்சி திட்டத்தின் ஊடாக பெண்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துதல், கிராம அபிவிருத்தி முன்னெடுத்தல் உள்ளிட்ட நிகழ்வாக இடம்பெற்றது

இந் நிகழ்வில் மாந்தை மேற்கு பிரதேச செயலக அதிகாரிகள்,கிராம அலுவலர்கள்,உள்ளடங்களாக அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

மாந்தை மேற்கில் ஓரங்கட்டப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை கட்டி எழுப்பும் நிகழ்ச்சித் திட்டம்
மாந்தை மேற்கில் ஓரங்கட்டப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை கட்டி எழுப்பும் நிகழ்ச்சித் திட்டம்