மாணிக்கக்கல் என சந்தேகிக்கப்படுகின்ற கற்பாறை கண்டுபிடிப்பு!

கம்பளை, கலஹா தெல்தோட்டை தோட்டத்திலுள்ள கோயிலுக்கு அருகில், மாணிக்கக்கல் என சந்தேகிக்கப்படுகின்ற பாரிய கற்பாறை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் பேரிடரால் பாதிக்கப்பட்ட கண்டி மாவட்டம், கலஹா தெல்தோட்டை கள்ளந்தன்ன மேற்பிரிவில் உள்ள ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தில், நேற்று திங்கட்கிழமை வித்தியாசமான பிரகாசத்துடன் மிளிர்ந்த கற்பாறை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது

குறித்த கற்பாறை, இரவு நேரத்தில் பிரகாசமாக ஒளிர்ந்ததை கவனித்த தோட்ட மக்கள், அருகில் சென்று பார்த்த போது, அது ஒரு ரத்தினக்கல்லாக இருக்குமோ என சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது .

இந்த செய்தி கலஹா பொலிஸ் நிலையத்திற்கு உடனடியாக அறிவிக்கப்பட்டு, சம்பவ இடத்துக்கு சென்ற பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது

இந்த சம்பவம் குறித்த பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.