மாணவர்கள் உட்பட பலர் மதுபானசாலை திறப்பதற்கு எதிராக ஆர்ப்பாட்டம்
-பதுளை நிருபர்-
பதுளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட புவக்குடுமுல்ல பகுதியில் புதிதாக மதுபான சாலை ஒன்று திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் இன்று ஞாயிற்று கிழமை ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் குறித்த பகுதியில் மத வழிபாட்டு ஸ்தலங்களும், பாடசாலைகளும் காணப்படுவதாகவும் இப்பகுதியில் மதுபான சாலை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதாக கூறி பதாதைகளை ஏந்தி கோஷங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன்போது ஆர்ப்பாட்டத்தில் பெருந்திரளான அறநெறி பாடசாலை மாணவர்களும், மதகுருமாரும், பொதுமக்களும் கலந்து கொண்டு இருந்தனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்