
மாணவர்களுக்கான “விசேட கற்றல் செயற்பாட்டு மையம்”
-கிண்ணியா நிருபர்-
திருகோணமலை மாவட்டம் மாவடிச்சேனை வெருகலம்பதி இந்து மகா வித்தியாலயத்தில் கடந்த வியாழக்கிழமை ஏடு ஐக்கிய இராச்சியத்தின் (AEDU-UK) அனுசரணையுடன் ‘விசேட கற்றல் செயல்பாட்டு மையம்’ ஆரம்பிக்கப்பட்டது.
இதனூடாக அந்த பாடசாலையிலிருந்தும், அண்மித்த பாடசாலைகளிலிருந்தும் க.பொ.த சாதாரணதர, உயர்தர, தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைகளுக்காக மாணவர்களுக்கான விசேட வகுப்புக்கள் நடாத்தப் படும்.
இவ் நிகழ்ச்சிக்கு ஏடு ஐக்கிய இராச்சியத்தின் (AEDU-UK) சார்பில் திரு சதானந்தன், இலங்கை ஏடு ஒருங்கிணைப்பாளர் திரு வரதன், திருகோணமலை ஏடு ஒருங்கிணைப்பாளர் வைத்திய கலாநிதி ஞானகுணாளன், அண்மித்த பாடசாலை அதிபர்கள் ஆகியோருடன், மூதூர் பிரதேச கல்வி இயக்குநர் திருமதி நஷீர் முதன்மை விருந்தினராக கலந்து சிறப்பித்தார்கள்

