மாணவனை வைத்து தனக்கு மசாஜ் செய்யும் ஆசிரியை – வைரலான வீடியோ
ஆசிரியை ஒருவர் மாணவனை (சிறுவன்) வைத்து தனக்கு மசாஜ் செய்யும் வீடியோ வைரலானதையடுத்து குறித்த ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, உத்தரப்பிரதேச அரசு அறிவித்துள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் ஹர்தோய் மாவட்டத்தில் போகரி வட்டத்தில் உள்ள அரச ஆரம்ப நிலை பாடசாலையைச் சேர்ந்த மாணவனை கொண்டே ஆசிரியை மசாஜ் செய்துள்ளார்.
ஆசிரியையின் கையில் மசாஜ் செய்யும் காட்சிகள் வைரலானது இந்த வீடியோ அதிகமானோரால் பார்க்கப்பட்ட நிலையில் ஆசிரியை மீது விமர்சனங்கள் குவிந்ததையடுத்து அரச நிர்வாகம் விசாரணைக்கு உத்தரவிட்டது.
குறித்த ஆசிரியை ஏற்கனவே சில மாணவர்களை கொண்டு மசாஜ் செய்தது தொடர்பாக மேலும் சில புகார்கள் முன்பு வந்திருப்பதாக விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.