
மாடுகளை திருடும் நபர்களுக்கு 10 இலட்சம் ரூபா அபராதம்
மாடுகளை திருடும் நபர்களுக்கு விதிக்கப்படும் அபராதத்தை 10 இலட்சம் ரூபாவாக அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக விவசாய மற்றும் பெருந்தோட்ட அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
இந்த குற்றத்துக்காக தற்போது, மிருகவதைச் சட்டத்தின் கீழ் 50 ஆயிரம் ரூபாய் அபராதமாக விதிக்கப்படுகிறது.
எனினும், குறித்த அபராதத் தொகை போதுமானதல்லவென முன்வைக்கப்படும் கருத்துக்கள் வலுப்பெற்று வருகின்றன.
இதனை கருத்திற்கொண்டு மாடுகளை திருடும் நபர்களுக்கு விதிக்கப்படும் அபராதத் தொகையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
அத்துடன், இந்த குற்றத்துக்காக ஒரு வருடத்திற்கு கடூழிய சிறைத்தண்டனை விதிப்பது தொடர்பான சரத்துக்களை மிருகவதைச் சட்டத்தினுள் உள்ளடக்குமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
