மாடுகளிடையே வேகமாக பரவும் தோல் கழலை நோய்

குருநாகல் மாவட்டத்தின் சில பகுதிகளில் கால்நடைகள் (Lumpy skin disease) லம்பி ஸ்கின் டிசிஸ் அறிகுறிகளுடன் காணப்படுவதாக கால்நடை வளர்ப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதன் படி குருநாகல் மாவட்டத்தின் நாரம்மல, ஹொரம்பாவ, மெட்டியாவ, கெக்குணகொல்ல, பரகஹகொட்டுவ, மிதியால, பண்டாரகொஸ்வத்த, உள்ளிட்ட பகுதிகளில் மாடுகளிடையே தோல் கழலை நோய் பரவுகின்றமை கண்டறியப்பட்டுள்ளது.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில பகுதிகளில் அண்மையில் மாடுகளுக்கிடையே Lumpy skin disease எனப்படும் தோல் கழலை நோய் பரவியது குறிப்பிடத்தக்கது.

குறித்த நோய்த் தாக்கத்தினால் நூற்றுக்கும் அதிகமான மாடுகள் பாதிக்கப்பட்டுள்ளதாக கால்நடை வளர்ப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்