மஹியங்கனை பொலிஸாரினால் கைக்குண்டுடன் சுத்தா கைது
மஹியங்கனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தொடாங்வத்தை வீதி பூஜாநகர் பகுதியைச் சேர்ந்த மஹியங்கனை சுத்தா என்று அழைக்கப்படும் நபர் ஒருவர் நேற்று சனிக்கிழமை மாலை சுமார் 7.00 மணியளவில் மஹியங்கனை பொலிஸார் கைக்குண்டுடன் கைது செய்துள்ளனர்.
குறித்த சந்தேக நபர் சிறுவர் துஸ்பிரயோகம், வன்முறை சம்பவங்களுடன் தொடர்புடைய குற்றங்களுக்காக மஹியங்கனை பொலிஸாரினால் தேடப்பட்டு வந்தவர் ஆவார்.
இதன்போது குறித்த சந்தேக நபர் நேற்றைய தினம் தொடாங்வத்தை பூஜாநகர் வீதியில் குறுக்கே அமைந்துள்ள வீதியில் நீர் வினியோகிக்கும் இடத்துக்கு அருகாமையில் அமைந்துள்ள பாழடைந்த வீடொன்றில் மறைந்திருந்த வேளை மஹியங்கனை பொலிஸ் அதிகாரிகளினால் குறித்த வீடு சுற்றிவளைக்கப்பட்டு தேடுதல் நடத்திய போது பாழடைந்த வீட்டில் மறைந்து இருந்த சந்தேக நபரை கைது செய்து சோதனைக்கு உட்படுத்திய போது சந்தேக நபர் அணிந்திருந்த காற்சட்டை பையில் வைத்திருந்த கைக்குண்டுகளை மஹியங்கனை பொலிஸார் மீட்டுள்ளனர். அத்துடன் 29 வயதுடைய பூஜாநகர் பகுதியைச் சேர்ந்த சந்தேக நபரையும் கைது செய்துள்ளனர்.
குறித்த சந்தேக நபரிடம் கைக்குண்டு வைத்திருந்தமைக்கான காரணத்தையும் கைக்குண்டு எங்கிருந்து கொண்டு வரப்பட்டது என்பது தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் குறித்த சந்தேக நபரை நீதிவான் நீதிமன்றில் ஆஜர் படுத்துவதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருவதாக மஹியங்கனை பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்