மலையிலிருந்து மீட்கப்பட்ட சடலத்தின் கையில் ஆணின் பெயர்
தலவாக்கலை கிரேட் வெஸ்டர்ன் மலை உச்சியில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலத்தின் பிரேதப் பரிசோதனை நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையின் விசேட சட்ட வைத்தியர் சஞ்சய் வீரசேகரவினால் நடத்தப்பட்டது. எனினும் இது தொடர்பிலான அறிக்கை மூன்று வாரங்களுக்குப் பிறகே கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த பெண்ணின் உடல் உறுப்புகள் மேலும் பரிசோதிக்கப்பட வேண்டியதன் காரணமாக பிரேத பரிசோதனை அறிக்கை மூன்று வாரங்களில் வெளியிடப்படும் என பிரேத பரிசோதனையை மேற்கொண்ட நிபுணர் சட்ட வைத்தியர் தெரிவித்ததாக லிந்துலை பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
உயிரிழந்த பெண் 40-45 வயதுடைய பெண் எனவும், இடது கையில் மதுசங்க என்ற பெயர் பச்சை குத்தியிருந்ததாகவும் பிரேத பரிசோதனையில் இருந்து தெரியவந்துள்ளது.
உயிரிழந்த பெண் தொடர்பில் தகவல் கிடைத்தால் லிந்துலை பொலிஸாருக்கு வழங்குமாறும், பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்ட கிரேட் வெஸ்டர்ன் கீழ் பகுதியில் மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளதாக லிந்துலை பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்