
மலையக ரயில் சேவைகள் பாதிப்பு
தியத்தலாவ மற்றும் ஹப்புத்தளை புகையிரத நிலையங்களுக்கு இடைபட்ட பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை காலை 6.00 மணியளவில் மண் மேடு சரிந்து வீழ்ந்தமையினால் மலையக புகையிரத போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.
மேலும் தற்போது ரயில்பாதையை சீரமைக்கும் பணி நடைபெறுவதுடன் அதன் பின்னர் ரயில் சேவை வழமைக்கு திரும்பும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
