மலேசிய எழுத்தாளர் இராஜேந்திரன் பெருமாள் மட்டக்களப்பிற்கு விஜயம்

மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் அயலகத் தொடர்புகுழ தலைவர் இராஜேந்திரன் பெருமாள் நேற்று புதன்கிழமை மட்டக்களப்பிற்கு விஜயம்  மேற்கொண்டுள்ளார்.

அவரை மின்னல்24 செய்திகள் நிறுவனத்தினால் கௌரவித்து வரவேற்பளிக்கும் நிகழ்வு இன்று வியாழக்கிழமை காலை மட்டக்களப்பு East Lagoon Hotel இல் இடம்பெற்றது.

இதன்போது மலேசியா மற்றும் இலங்கை இலக்கியம் தொடர்பாக கலந்தரையாடப்பட்டது.

அத்துடன் மின்னல்24 செய்திகள் நிறுவனத்தின் முகாமையாளர் ஆறுமுகம் சிறீகந்தராஜாவினால் எழுத்தாளர் இராஜேந்திரன் பெருமாளிற்கு பொன்னாடை போர்த்தி மாலை அணிவிக்கப்பட்டு கௌரவம் வழங்கப்பட்டது.