
மலேசியாவில் உயிரிழந்த இலங்கையை சேர்ந்த இளம் தம்பதி
மலேசியாவின் கோலாலம்பூரில் கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற வாகன விபத்தில் இலங்கை தம்பதியினர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த தம்பதியினர் தங்கள் குழந்தையுடன் குழந்தைகள் விளையாடும் பகுதியிலிருந்து திரும்பிக் கொண்டிருந்தபோது, குடிபோதையில் வாகனம் ஓட்டி வந்த ஒருவர் அவர்கள் மீது மோதியுள்ளார்.
இந்த விபத்தில் தம்பதியர் உயிரிழந்துள்ளதுடன், குழந்தை உயிர் பிழைத்துள்ளது.
உயிரிழந்த 33 மற்றும் 35 வயதுடைய குறித்த தம்பதியினர் மலேசியாவில் மென்பொருள் பொறியியலாளர்களாக பணியாற்றி வந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
