
மறைந்த பிரபல பாடகி கலாசூரி லதா வல்பொலவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இறுதி அஞ்சலி செலுத்தினார்.
அவரின் பூதவுடல் வைக்கப்பட்டிருந்த பொரளை ஜயரத்ன ‘ரெஸ்பெக்ட்’ மலர்ச்சாலைக்கு நேற்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் சென்ற ஜனாதிபதி, அவரின் பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தியதோடு குடும்ப உறவினர்கள் மற்றும் சக கலைஞர்களுக்கு தனது இரங்கலைத் தெரிவித்தார்.
வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க, புத்தசாசன, மத மற்றும் கலாசார பிரதி அமைச்சர் கமகெதர திசாநாயக்க உள்ளிட்டோர் இதன்போது இணைந்து கொண்டனர்.
