
மருந்துகள் அவசரகால கொள்வனவுகளின் கீழ் இறக்குமதி
அவசரகால கொள்வனவுகளின் கீழ் இந்திய கடன் திட்டத்தில் பெறப்பட்ட 378 வகையான மருந்துகளும் வைத்தியசாலைகளுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளதாக அமைச்சின் மேலதிக செயலாளர் வைத்தியர் சமன் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
மேலும் மருத்துவமனைகளில் 77 வகையான மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது எனவும் அவர் தெரிவித்தார்.
