மருந்தகத்தின் மீது பெட்ரோல் குண்டு தாக்குதல்

-திருகோணமலை நிருபர்-

திருகோணமலை – திரியாய் மத்திய மருந்தகத்திற்கு பெட்ரோல் குண்டு தாக்குதல் நேற்று வியாழக்கிழமை இரவு 7 மணியளவில் நடாத்தப்பட்டுள்ளது.

குறித்த பெட்ரோல் குண்டு தாக்குதலால் உயிர்ச்சேதங்கள் எதுவுமே ஏற்படவில்லை எனவும் மருந்து கொடுக்கும் இடம் மாத்திரமே சேதமாகியுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

காலை 8 மணி தொடக்கம் 4 மணி வரை மாத்திரமே மருந்து வழங்கப்பட்டு வருவதாகவும் வைத்தியசாலையில் காவலாளிகள் எவரும் இருக்கவில்லை எனவும் ஆரம்பகட்ட விசாரணை மூலம் தெரிய வந்துள்ளது.

இதேவேளை குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய எவரும் கைது செய்யப்படவில்லை எனவும் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக குச்சவெளி பொலிஸார் தெரிவித்தனர்.