
மருதமுனை ஜமைக்கின் விளையாட்டு கழக தலைவர் மற்றும் பொதுச்செயலாளர் பொன்னாடை போற்றி கௌரவிக்கப்பட்டனர்
மருதமுனை ஜமைக்கின் விளையாட்டு கழக கிரிக்கெட் தொடரின் போட்டியை சிறப்பு மிக்க தொடராக வடிவமைத்த தலைவர் மற்றும் பொதுச்செயலாளர் பொன்னாடை போற்றி கௌரவிக்கப்பட்டனர்.
மருதமுனை கிரிக்கெட் வரலாற்றில் சிறப்புமிக்க தொடராகவும், பிரமாண்ட பரிசுத்தொகைகளைக் கொண்ட தொடராகவும் கணிக்கப்பட்ட மருதமுனை ஜமைக்கின் விளையாட்டு கழக கிரிக்கெட் தொடரின் போட்டியை சிறப்பு மிக்க தொடராக வடிவமைத்த கழகத்தின் தலைவர் ஏ.ஆர்.எம். தௌபீக், பொதுச்செயலாளர் எம்.எஸ்.எம். பௌமி ஆகியோரை கல்முனை மாநகர சபை முன்னாள் உறுப்பினரும் அல் மீஸான் பௌண்டஷன் ஸ்ரீலங்காவின் மருதமுனை இணைப்பாளருமான ஸமட் ஹமீட் பொன்னாடை போற்றி கௌரவித்தார்.


