மரக்கறிகளின் விலைகள் அதிகரித்தன

பேலியகொடை மெனிங் சந்தையில் இன்று சனிக்கிழமை மரக்கறிகளின் விலைகள் அதிகரித்துள்ளதாக சந்தை நிலவரங்கள் தெரிவிக்கின்றன.

அதன்படி, ஒரு கிலோ போஞ்சிக்காய் 700 ரூபாவாகவும் ஒரு கிலோ கரட் 130 ரூபா முதல் 150 ரூபா வரையும், ஒரு கிலோ பீர்க்கங்காய் 250 ரூபாவாகவும் ஒரு கிலோ கறி மிளகாய் 350 ரூபாவாகவும் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

ஒரு கிலோ இஞ்சி 3800 ரூபாவாகவும் ஒரு கிலோ தக்காளி 150 ரூபாவாகவும் ஒரு கிலோ பச்சை மிளகாய் 150 ரூபாவாகவும் ஒரு கிலோ பூசணிக்காய் 80 ரூபாவாகவும் ஒரு கிலோ பீட்ரூட் 400 ரூபாவாகவும் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்