
மயிலத்தமடு மாதவனை பிரச்சனை சில மாதங்களில் பூதாகரமாக மாறும்
மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தின் போது மயிலத்தமடு, மாதவனையில் மக்கள் எதிர் கொள்ளும் பிரச்சனைகள் தொடர்பில் ஆராயப்பட்டது.
அதன் போது. மயிலத்தமடு, மாதவனையில் கொல்லப்பட்ட மாடுகளுக்கான நிவாரணம் பண்ணையாளர்களுக்கு வழங்கப்பட வேண்டும், இதற்கான முன்மொழிவு நாடாளுமன்ற உறுப்பினர் இரா சாணக்கியனால் வழங்கப்பட்டிருந்தது
இவ்விடயம் தொடர்பில் இரா சாணக்கியன்,
இருப்பினும் இவை தொடர்பான தகவல்கள் மாவட்ட அரச திணைக்களங்களினால் சரியான முறையில் அனுப்பப்படவும் இல்லை வழங்கப்படவும் இல்லை. வரட்சியான காலம் என்பதினால் ஓர் சிலரே அங்கு காணப்படுகின்றார்கள்
ஆனால் இன்னும் சில மாதங்களில் பலர் அங்கு காணப்படுவர் இதற்கான உரிய நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். அல்லாதுவிடில் இன்னும் சில மாதங்களில் இவ் பிரச்சனையானது பூதாகரமாக மாறும் நிலைமை ஏற்படும்.
அடுத்ததாக செங்கலடி பிரதேச செயலக பிரிவில் கூட சில பல அரசியல் வாதிகளின் பின்னணியில் பல சட்ட விரோத காணி அபகரிப்புகள் நடந்துவருகின்றது.
புளுட்டுமானோடையில் ஓர் அரசியல் வாதியின் பின்புலமுள்ளவர்கள் காணி பிடிப்பதினை சென்ற மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டங்களில் குறிப்பிட்டிருந்தேன்.
இன்னும் சில காணிகள் சனி மற்றும் ஞாயிறு தினங்களில் இயந்திரங்களின் துணையோடு காணிகளை துப்புரவு செய்து கையகப்படுத்துவது இடம்பெற்று வருவது குறிப்பிடத்தக்கது, என தெரிவித்துள்ளார்.






மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

