
மன்ன ரமேஸை தடுத்து வைத்து விசாரிக்க உத்தரவு
டுபாயில் இருந்து இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட போதைப்பொருள் வர்த்தகரான மன்ன ரமேஸை 72 மணித்தியாலங்கள் தடுத்து வைத்து விசாரிப்பதற்கு பொலிஸாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
டுபாயில் தலைமறைவாகியிருந்த மன்ன ரமேஸ், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் அதிகாரிகளால் நேற்று செவ்வாய் கிழமை அதிகாலை இலங்கைக்கு அழைத்து வரப்பட்டார்.
இதனையடுத்து நீதிமன்று வழங்கிய உத்தரவை தொடர்ந்த மேல் மாகாண தெற்கு குற்றவியல் விசாரணை பிரிவுக்கு அவர் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
