
மன்னார் மூர் வீதி ஜும்மா பள்ளிவாசலில் புனித நோன்பு பெருநாள் தொழுகை
-மன்னார் நிருபர்-
இஸ்லாமிய மக்கள் இன்று சனிக்கிழமை புனித நோன்பு பெருநாளை கொண்டாடுகின்றனர்.
அந்த வகையில் மன்னார் மாவட்டத்தில் உள்ள இஸ்லாமிய மக்களும் இன்று புனித நோன்புப் பெருநாளை கொண்டாடுகின்றனர்.
மன்னார் மூர்வீதி ஜும்மா பள்ளிவாசலில் இன்று சனிக்கிழமை நோன்பு பெருநாள் தொழுகைகள் இடம் பெற்றது.
காலை 6.45 மணிக்கு பெண்களுக்கும் காலை 7.30 மணியளவில் ஆண்களுக்கும் பெருநாள் தொழுகை இடம் பெற்றது.
இவ் தொழுகை மூர்வீதி ஜும்மா பள்ளிவாசலின் மௌலவி எம்.அஸீம் தலைமையில் நடைபெற்றது.
இதன் போது, நோன்பு பெருநாள் முக்கியத்துவம், அல்குர்ஆன் சமய நற்சிந்தனைகள், பற்றியும் இங்கு எடுத்து கூறப்பட்டது.
மேலும், நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்காகவும் விசேடமாக துவா தொழுகைகள் இடம் பெற்றது.
மேலும் மாவட்டத்தில் உள்ள ஏனைய பள்ளிவாசல்களிலும் பெருநாள் தொழுகைகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.


மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

