மன்னாரில் இடம்பெறும் காற்றாலை திட்டத்திற்கு எதிரான மக்கள் போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் முகமாக முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் பகுதியில் இருந்து இரண்டு இளைஞர்கள் நேற்று புதன்கிழமை கால்நடையாக நடந்து மன்னாரை நோக்கி பயணித்துள்ளனர்.
அவர்கள் தாங்கள் போகும் வழியெங்கிலும் உள்ள வர்த்தக நிலையங்கள் மற்றும் பொது மக்களுக்கு துண்டு பிரசுரங்களையும் வழங்கி கொண்டு பயணிக்கின்றனர்.