மன்னாரில் கேரள கஞ்சாவுடன் பெண் ஒருவர் கைது

-மன்னார் நிருபர்-

மன்னார் பேசாலை பகுதியில் கேரள கஞ்சாவுடன் பெண் ஒருவர் நேற்று செவ்வாய்க்கிழமை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இராணுவ புலனாய்வு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மன்னார் பொலிஸ் பிரிவு குற்றப் புலனாய்வு பிரிவினருடன் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது மன்னார் பேசாலை பொலிஸ் பிரிவில் உள்ள ஒரு வீட்டை நேற்று செவ்வாய்க்கிழமை  பேசாலை சோதனையிட்டபோது ஒரு கிலோ 30 கிராம் கேரள கஞ்சாவுடன் ஒரு குடும்பப் பெண் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்

இந்த பெண் நீண்ட காலமாக இந்த கடத்தலை மேற்கொண்டு வருவதாக தெரிய வந்துள்ளதுடன், கைது செய்யப்பட்ட கஞ்சாவும் சந்தேகநபர் பெண்ணும் மேலதிக விசாரணைகளுக்காக பேசாலை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

இப் பெண்ணை சட்ட நடவடிக்கைக்காக இன்று புதன்கிழமை   மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராக்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக பேசாலை பொலிசார் தெரிவித்தனர்

அத்துடன் இது தொடர்பாக ஒருவர் தேவைப்படுவதாகவும் பொலிசார் மேலும் தெரிவித்தனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்