மன்னாரில் இரத்த தானம் வழங்கி வைப்பு
மன்னாரில் இரத்த தானம் வழங்கி வைப்பு
-மன்னார் நிருபர்-
35ஆம் ஆண்டு தியாகிகள் தின நினைவேந்தல் நிகழ்வு நேற்றைய தினம் வியாழக்கிழமை மாலை மன்னாரில் அமைந்துள்ள ஈ.பி.ஆர்.அல்.எப். அலுவலகத்தில் கட்சியின் மாவட்ட அமைப்பாளர் ஏ.விஜயராஜ் தலைமையில் இடம்பெற்றது.
குறித்த நிகழ்வில் கட்சியின் உயர்பீட உறுப்பினர் எஸ்.ஆர்.குமரேஸ் ,கட்சியின் நகர சபை உறுப்பினர் எஸ்.ரஜனி,முன்னாள் உறுப்பினர்கள்,கட்சியின் உறுப்பினர்கள், கலந்து கொண்டு தியாகிகளுக்கு மலர் தூவி மாலை அணிவித்து சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.
இதேவேளை தியாகிகள் தினத்தையொட்டி கட்சியின் உறுப்பினர்களினால் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் இரத்ததானமும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.